Homeசெய்திகள்சினிமா'கேங்கர்ஸ்' படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு!

‘கேங்கர்ஸ்’ படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

கேங்கர்ஸ் படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.'கேங்கர்ஸ்' படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களை இயக்கிய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தையும் எடுத்து முடித்துள்ளார் சுந்தர்.சி. இந்த படத்தில் சுந்தர். சியுடன் இணைந்து வடிவேலு கேத்தரின் தெரசா, வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரிக்க சி.சத்யா இதற்கு இசையமைத்திருக்கிறார். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தலைநகரம், நகரம் ஆகிய படங்களுக்கு பிறகு சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் நடிகர் வடிவேலு இப்படத்தில் லேடி கெட்டப் உள்ளிட்ட பல கெட்டப்புகளில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலரும், அதைத் தொடர்ந்து வெளியான முதல் பாடலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து என் வான்மதியே எனும் பாடல் இன்று (ஏப்ரல் 21) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடல் சுந்தர்.சி – வாணி போஜன் ஆகிய இருவருக்குமான காதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ