கௌதம் வாசுதேவ் மேனன், விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். அதே சமயம் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வரும் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது பல படங்களிலும் நடித்து வருகிறார்.
கடைசியாக கௌதம் மேனன், விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கடைசி சமயங்களில் ஒரு சில காரணங்களால் துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே கௌதம் வாசுதேவ் மேனன், 2024இல் தன்னுடைய படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்து விட வேண்டும் என தான் இயக்கிய ஜோஷுவா இமை போல் காக்க எனும் படத்தை களம் இறக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து கிருஷ்ணா, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகளும் கடந்த 2019 ஆம் ஆண்டே நிறைவடைந்தது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது இப்படம் மார்ச் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களை பட குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜோஷுவா படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணி அளவில் வெளியாக இருப்பது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் ஆக்சன் நிறைந்த ட்ரெய்லராக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.