விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்க ஞானவேல் ராஜா, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் படத்தை தயாரித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம் தவிர பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படமானது கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி படத்தின் பின்னணி வேலைகளும் ப்ரமோஷன் பணிகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் சமீபத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தங்கலான் படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
Producer GnanavelRaja after watching the Final Output of #Thangalaan:
“I’m extremely happy. After the completion of the First half itself, I got filled with tears of Joy. I feel very proud among the movies which i have took so far❣️” pic.twitter.com/oXBm9AlAFW
— AmuthaBharathi (@CinemaWithAB) August 7, 2024
அந்த வகையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். படத்தின் முதல் பாதி எடுக்கும் போது எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. இந்த மாதிரி ஒரு படம் தயாரிக்கிறேன் என்று பெருமையாக இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து தயாரித்த படங்களிலேயே பெருமைப்படும் படமாக தங்கலான் படம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.