கோட் படத்தின் நான்காவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அதை தொடர்ந்து தனது 68வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இதற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை சுருக்கமாக தி கோட் என்று சொல்லி வருகின்றனர். இதில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மைக் மோகன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. எனவே படத்தினை வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதற்காக படமானது முழு வீச்சில் தயாராகி வருகிறது. படப்பிடிப்புகள், டப்பிங் பணிகள் போன்றவை ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தான் சமீபத்தில் நடந்த பேட்டியில் வெங்கட் பிரபு இன்னும் சில நாட்களில் செம பாடல் ஒன்று வெளியாகும் என தெரிவித்திருந்தார். எனவே அந்தப் பாடல் விஜய் மற்றும் திரிஷாவிற்கான பாடல் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.
தற்போது இந்த பாடல் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது விஜய், திரிஷா இருவரும் நடனமாடும் இந்த நான்காவது பாடலை அனிருத் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனராம். இந்த பாடலுக்கு சேகர் மாஸ்டர் நடன கலைஞராக பணியாற்றி இருக்கிறார். எனவே யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகி இருக்கும் இந்த புதிய பாடல் வருகின்ற ஆகஸ்ட் 30 அல்லது ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..


