spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கோலி சோடா' பட இயக்குனரின் புதிய வெப் சீரிஸ்..... டைட்டில் என்னன்னு தெரியுமா?

‘கோலி சோடா’ பட இயக்குனரின் புதிய வெப் சீரிஸ்….. டைட்டில் என்னன்னு தெரியுமா?

-

- Advertisement -

பிரபல இயக்குனராக வலம் வரும் விஜய் மில்டன், ஆரம்பத்தில் திரைத்துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். பின்னர் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார்.'கோலி சோடா' படம் இயக்குனரின் புதிய வெப் சீரிஸ்..... டைட்டில் என்னன்னு தெரியுமா? ஏற்கனவே பல படங்களை இயக்கியுள்ள இவர், அடுத்ததாக விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் விஜய் மில்டன், புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்காக இந்த வெப் தொடரை இசை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த படத்திற்கு கோலி சோடா 1.5 என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.'கோலி சோடா' படம் இயக்குனரின் புதிய வெப் சீரிஸ்..... டைட்டில் என்னன்னு தெரியுமா?

ஏற்கனவே விஜய் மில்டன் இயக்கி இருந்த கோலி சோடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்ததாக கோலி சோடா 2 திரைப்படத்தையும் இயக்கி இருந்தார் விஜய் மில்டன். தற்போது இவர் இயக்க உள்ள கோலி சோடா 1.5 வெப் சீரிஸ், கோலி சோடா 1 மற்றும் 2 ஆகிய இரண்டு கதைகளுக்கும் இடையில் நடக்கும் கதையாக உருவாக இருக்கிறதாம். மேலும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ