Homeசெய்திகள்சினிமாவிரைவில் தொடங்க உள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

விரைவில் தொடங்க உள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

-

கடந்தாண்டு வெளியான துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.விரைவில் தொடங்க உள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு! அதே சமயம் அஜித், குட் பேட் அக்லி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அஜித்தின் 63வது படமான இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி அதை தொடர்ந்து இதன் முதல் கட்ட படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. ஒரு பாடல் காட்சியுடன் கிட்டத்தட்ட 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் தொடங்க உள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!நடிகர் அஜித், விடாமுயற்சி படத்தை முடித்த பின்னர் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 6ம் தேதி இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று (ஆகஸ்ட் 3) மாலை படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ