ஜி.வி. பிரகாஷ் வாடிவாசல் பாடலுக்கான இசை பணிகளை தொடங்கியுள்ளார்.
சூர்யாவின் நடிப்பில் தற்போது ரெட்ரோ திரைப்படம் உருவாகி இருக்கிறது. அதே சமயம் சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். அதன்படி இந்த படத்தினை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தாணு இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து அமீர், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு இந்த படம் தொடர்பான அடுத்த அடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தாலும் படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. அதேசமயம் சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் 2025 மே மாதத்தில் தொடங்கும் என அப்டேட் கொடுத்திருந்தார்.
#Vaadivaasal song composing has started . ✨ @theVcreations @Suriya_offl pic.twitter.com/squZGM0dyz
— G.V.Prakash Kumar (@gvprakash) March 7, 2025
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், வாடிவாசல் படத்தின் பாடல் பாடலுக்கான இசை பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக வெற்றிமாறனுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.