spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிறந்த இசையமைப்பாளர் விருது.... 'அமரன்' படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்!

சிறந்த இசையமைப்பாளர் விருது…. ‘அமரன்’ படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்!

-

- Advertisement -

அமரன் படக்குழுவுக்கு ஜி.வி. பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார்.சிறந்த இசையமைப்பாளர் விருது.... 'அமரன்' படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்!ஜி.வி. பிரகாஷ் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பெயரையும் புகழையும் பெற்றுள்ளார். அந்த வகையில் தற்போது குட் பேட் அக்லி, வணங்கான், இட்லி கடை, வீர தீர சூரன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். மேலும் சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். இந்த படம் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100வது படமாகும். இதற்கிடையில் ஜி.வி. பிரகாஷ், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கு இசையமைத்து பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளை பெற்றார்.

மேலும் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அமரன் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷுக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாக ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அமரன் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

MUST READ