spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇரட்டை வேடங்களில் மிரட்டும் ஹன்சிகா... காந்தாரி புகைப்படம் வைரல்...

இரட்டை வேடங்களில் மிரட்டும் ஹன்சிகா… காந்தாரி புகைப்படம் வைரல்…

-

- Advertisement -
ஹன்சிகா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் காந்தாரி திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கோலிவுட் திரையில் அமுல் பேபியாக கொண்டாடப்பட்ட கதாநாயகி ஹன்சிகா மோத்வானி. தமிழில் எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, அடுத்தடுத்து மாப்பிள்ளை, வேலாயுதம், வாலு, சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், தனுஷ், ஆர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் முடித்துக் கொண்டார்.

we-r-hiring
அதைத்தொடர்ந்து, அண்மையில் அவரது நடிப்பில் பார்ட்னர் என்ற திரைப்படம் வெளியானது. அதில், ஆதிக்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார். மேலும், சாந்தனு மற்றும் முகின் ராவுடன் இணைந்து இணைய தொடரிலும் அவர் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பு மற்றும் தொழில்களிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றார். ரவுடி பேபி, கார்டியன், காந்தாரி, நாயகன் உள்பட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கண்ணன் தயாரித்து இயக்கும் திரைப்படம் தான் காந்தாரி. இதில் ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். மெட்ரோ ஷிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், நரேன், வினோதினி, பவன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார். இந்து அறநிலையத்துறை அதிகாரி மற்றும் நரிக்குறவப் பெண் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நரிக்குறவப் பெண்ணாக அவர் நடிக்க சில பயிற்சிகளை எடுத்துள்ளாராம்.

MUST READ