spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஒரு திறமையான புதுமுக இயக்குனரை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி'.....சைரன் ஆடியோ லான்சில் ஜெயம் ரவி!

‘ஒரு திறமையான புதுமுக இயக்குனரை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி’…..சைரன் ஆடியோ லான்சில் ஜெயம் ரவி!

-

- Advertisement -

'ஒரு திறமையான புதுமுக இயக்குனரை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி'.....நடிகர் ஜெயம் ரவி!ஒரு திறமையான இயக்குனரை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.....நடிகர் ஜெயம் ரவி!ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள படம் சைரன். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'ஒரு திறமையான புதுமுக இயக்குனரை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி'.....நடிகர் ஜெயம் ரவி!ஒரு திறமையான இயக்குனரை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.....நடிகர் ஜெயம் ரவி!ஆக்சன் திரில்லர் கலந்த குடும்ப படமாக உருவாகியுள்ள சைரன் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே படத்தின் டீசரும் அதைத் தொடர்ந்து வெளியான முதல் இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதேசமயம் சைரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர். 'ஒரு திறமையான புதுமுக இயக்குனரை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி'.....நடிகர் ஜெயம் ரவி!ஒரு திறமையான இயக்குனரை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.....நடிகர் ஜெயம் ரவி!இவ்விழாவில் பேசிய ஜெயம் ரவி, ” சைரன் படத்தில் அனைத்து குடும்பங்களும் விரும்பும் வலுவான, உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. அடுத்தடுத்து ஆக்சன் படங்களுக்கு பிறகு இந்த குடும்ப படத்திற்கு திரும்பி இருக்கிறேன். இதில் அருமையான அப்பா – மகள் பந்தம் இருக்கிறது. ஒரு திறமையான அறிமுக இயக்குனரை மீண்டும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பேசியுள்ளார்.

MUST READ