spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநீண்ட இடைவெளிக்கு பிறகு 'லால் சலாம்' படத்தில் இணைந்த பாட்ஷா பட கூட்டணி!

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘லால் சலாம்’ படத்தில் இணைந்த பாட்ஷா பட கூட்டணி!

-

- Advertisement -

நீண்ட இடைவெளிக்கு பிறகு 'லால் சலாம்' படத்தில் இணைந்த பாட்ஷா பட கூட்டணி!ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். ரஜினி இந்த படத்தில் மொய்தீன் பாயாக நடிக்க விக்ராந்த் ரஜினியின் மகனாக நடித்துள்ளார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களம் என்பதால் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கௌரவ இடத்தில் நடித்துள்ளார். லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 9 அதாவது நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள லால் சலாம் படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பாக படத்தின் டீசர், அதைத் தொடர்ந்து பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் லால் சலாம் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு 'லால் சலாம்' படத்தில் இணைந்த பாட்ஷா பட கூட்டணி!இந்நிலையில் படத்தின் முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி கடந்த 1995 ஆம் ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பாட்ஷா பட கூட்டணி லால் சலாம் படத்தில் இணைந்துள்ளது. பாட்ஷா படத்தில் ரஜினியுடன் இணைந்து ரஜினிக்கு நண்பராக நடித்திருந்த நடிகர் சரண்ராஜ், லால் சலாம் படத்திலும் ரஜினியின் நண்பராக நடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்களின் கூட்டணி லால் சலாம் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ