Homeசெய்திகள்சினிமாவெற்றிகரமான 25வது நாளில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷின் 'லப்பர் பந்து'!

வெற்றிகரமான 25வது நாளில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷின் ‘லப்பர் பந்து’!

-

- Advertisement -

அட்டகத்தி தினேஷ், பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். வெற்றிகரமான 25வது நாளில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷின் 'லப்பர் பந்து'!அதைத்தொடர்ந்து குக்கூ, விசாரணை போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பெயர் பெற்றவர். அதே சமயம் ஹரிஷ் கல்யாண், பியார் பிரேமா காதல், தாராள பிரபு, பார்க்கிங் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் இணைந்து லப்பர் பந்து எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், விஜயகாந்தின் தீவிர ரசிகராக நடித்திருந்தார். வெற்றிகரமான 25வது நாளில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷின் 'லப்பர் பந்து'!ஹரிஷ் கல்யாண் விஜயின் ரசிகராக நடித்திருந்தார். இருவருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ கிளாஸ் தொடர்பான கதை தான் இந்த லப்பர் பந்து. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் இன்று (அக்டோபர் 14) 25வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ