நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு, பியார் பிரேமா காதல் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத் தொடர்ந்து இவர் நடித்திருந்த எல் ஜி எம் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் இழந்த அந்த வெற்றியை பார்க்கிங் படத்தின் மூலம் திரும்பப் பெற்றார் ஹரிஷ் கல்யாண். கடந்தாண்டு இறுதியில் வெளியான பார்க்கிங் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதே சமயம் இவர் லப்பர் பந்து, நூறு கோடி வானவில் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் டீசல் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண். இந்த படத்தை சண்முகம் முத்துச்சாமி இயக்க தர்டு ஐ என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ் பி சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதில் ஹரிஷ் கல்யாணத்து ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி தற்போது படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆகவே இனிவரும் நாட்களில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -