spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅடுத்த ஹிட் பாடலை கொடுக்க தயாரான 'டீசல்' படக்குழு.... ப்ரோமோவை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!

அடுத்த ஹிட் பாடலை கொடுக்க தயாரான ‘டீசல்’ படக்குழு…. ப்ரோமோவை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!

-

- Advertisement -

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள டீசல் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.அடுத்த ஹிட் பாடலை கொடுக்க தயாரான 'டீசல்' படக்குழு.... ப்ரோமோவை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதற்கிடையில் இவர் டீசல் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அடுத்த ஹிட் பாடலை கொடுக்க தயாரான 'டீசல்' படக்குழு.... ப்ரோமோவை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!இந்த படத்தை தெர்ட் ஐ என்டேர்டெயின்மெண்ட் மற்றும் எஸ் பி சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சண்முக முத்துசாமி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது இதுவரை ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்த படத்தில் இருந்து வெளியான ‘நங்கூரமா இறங்குற- (BEER SONG)’ எனும் பாடல் இரண்டு வருடங்களுக்கு முன்பாக வெளியானாலும் இப்போது வரையிலும் இணையத்தை கலக்கி வருகிறது. அந்த அளவிற்கு ஏகப்பட்ட பேர் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து பாடலை ட்ரெண்டாகி வருகின்றனர்.

we-r-hiring

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடல் நாளை (பிப்ரவரி 16) காலை 11.11 மணியளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பாடலும் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் தொடர்பான அறிவிப்பை நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைதள பக்கத்தில் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த வீடியோவும் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.

MUST READ