சூர்யாவின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா கடைசியாக ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும் என பேச்சு அடிபடுகிறது. இதற்கிடையில் சூர்யா, வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்திலும் சூர்யா நடிக்கப் போவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. அதன்படி தற்காலிகமாக ‘சூர்யா 47’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் எனவும் அதற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நானி நடிப்பில் வெளியான ‘சரிபோதா சனிவாரம்’ படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா, சமீபத்தில் சூர்யாவை சந்தித்து கதை சொன்னதாக அப்டேட் கிடைத்துள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


