Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2' படத்தின் பின்னணி இசையமைப்பாளர் இவர் தான்!

‘புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசையமைப்பாளர் இவர் தான்!

-

- Advertisement -

அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 – தி ரூல் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 'புஷ்பா 2' படத்தின் பின்னணி இசையமைப்பாளர் இவர் தான்!ஏற்கனவே புஷ்பா 1 திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நிலையில் புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. அதே சமயம் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் நடிகை ஸ்ரீ லீலா, ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. எனவே இந்த பாடலும் ‘ஊ சொல்றியா’ பாடலைப் போல் இந்திய அளவில் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் பின்னணி இசை அமைப்பாளராக தமன் பணியாற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்தின் பாடல்களுக்கு மட்டும் இசையமைப்பாளராக பணியாற்றி வருவதாகவும் இசையமைப்பாளர் தமன் தான் இப்படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. 'புஷ்பா 2' படத்தின் பின்னணி இசையமைப்பாளர் இவர் தான்!இதனை ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் தமன் உறுதி செய்துள்ளார். அதன்படி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமன் பேசும்போது, “எனக்காக புஷ்பா 2 படம் காத்திருக்கிறது. நான் கிளம்ப வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். ஆகையினால் இதன்மூலம் தமன், புஷ்பா 2 திரைப்படத்தில் இணைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.

மேலும் புஷ்பா 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ