இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவருடைய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பலரின் பேவரைட் படங்களாக இருந்து வருகிறது. அதேசமயம் வெற்றிமாறனுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தெலுங்கில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் நடந்த தேவரா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் வெற்றிமாறன் உடன் இணைந்து நேரடி தமிழ் படம் பண்ண வேண்டும் எனவும் அதனை தெலுங்கில் டப் செய்து கொள்ளலாம் எனவும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கிடையில் இயக்குனர் வெற்றிமாறன், ஜூனியர் என்டிஆர் – ஐ நேரில் சந்தித்து கதை ஒன்றை கூறி இருப்பதாகவும் அந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக போகிறது எனவும் சொல்லப்பட்டது. அத்துடன் முதல் பாகத்தில் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடித்த இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிப்பார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.
இவ்வாறு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் தான் ஜூனியர் என்டிஆரும் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து வெற்றிமாறனிடம் இது குறித்து கேட்டபோது, “விடுதலை 2 மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களுக்குப் பிறகு இது நடக்கும். ஏற்கனவே ஜூனியர் என்டிஆரிடம் கதை சொல்லி இருக்கிறேன். விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.
- Advertisement -