உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் இந்தியன் 2 எனும் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் படமானது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வரும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. மேலும் கமல்ஹாசனின் 235 வது திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கப் போவதாகவும் 236 ஆவது படத்தை நெல்சன் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் தான் நடிகர் கமல்ஹாசன், சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் தனது 237 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதன்படி KH 237 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க போகிறார் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் அவருடைய இசை கமலுக்கு மிகவும் பிடித்துப் போனதால் தனது அடுத்த படத்திலும் ஜிவி பிரகாஷை இசையமைப்பாளராக கமிட் செய்துள்ளாராம் கமல். எனவே இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -