Homeசெய்திகள்சினிமாஇவர் தான் ரியல் லைஃப் ஹீரோ.... மோகன்லாலை பாராட்டும் ரசிகர்கள்!

இவர் தான் ரியல் லைஃப் ஹீரோ…. மோகன்லாலை பாராட்டும் ரசிகர்கள்!

-

- Advertisement -

மலையாள சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வரும் மோகன்லாலுக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது நடிப்பில் கடைசியாக எம்புரான், துடரும் ஆகிய படங்கள் வெளியாகின. இவர் தான் ரியல் லைஃப் ஹீரோ.... மோகன்லாலை பாராட்டும் ரசிகர்கள்!அதில் எம்புரான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் துடரும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது. இது தவிர இன்னும் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் மோகன்லால் தமிழில், ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் என பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் நேற்று (மே 21) மோகன்லால் தனது 65 வது பிறந்த நாளை கொண்டாடினார். உலகம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேசமயம் இவருடைய அடுத்த படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தவிர மோகன்லால், பலரும் பாராட்டும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது தன்னுடைய விஸ்வஷாந்தி அறக்கட்டளையின் மூலம் பேபி மெமோரியல் மருத்துவமனையுடன் இணைந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் குழந்தைகளுக்கான மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. எனவே சமூக வலைதளங்களில் பலரும் இவர்தான் ரியல் லைஃப் ஹீரோ என்று மோகன்லாலை பாராட்டி வருகின்றனர்.

MUST READ