Homeசெய்திகள்சினிமாஹிப் ஹாப் ஆதியின் 'பிடி சார்'..... ஓடிடியில் வெளியானது!

ஹிப் ஹாப் ஆதியின் ‘பிடி சார்’….. ஓடிடியில் வெளியானது!

-

- Advertisement -
kadalkanni

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான பிடி சார் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.ஹிப் ஹாப் ஆதியின் 'பிடி சார்'..... ஓடிடியில் வெளியானது!

ஹிப் ஹாப் ஆதி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் ஆரம்பத்தில் பல ஆல்பம் பாடல்களை தந்தவர். அதன்பின் சினிமாவில் நுழைந்து ஆம்பள, வணக்கம் சென்னை, அரண்மனை போன்ற படங்களுக்கு இசையமைத்து பெயர் பெற்றார். அதைத் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்திய இவர் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார். அதன்படி மீசைய முறுக்கு, நட்பே துணை, வீரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக இவர் பிடி சார் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், முனீஸ்காந்த், அனிகா சுரேந்திரன்
போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதியின் 'பிடி சார்'..... ஓடிடியில் வெளியானது!கார்த்திக் வேணுகோபாலன் இந்த படத்தை இயக்க வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி தான் இசையமைத்திருந்தார். கடந்த மே 24 அன்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் படமானது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

MUST READ