ஹிப் ஹாப் ஆதியின் ‘வீரன்’ படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. அந்தப் படத்தை அவரே இயக்கவும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் அரண்மனை, ஆம்பள, இமைக்கா நொடிகள் தனி ஒருவன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தற்போது இவர் சத்திய ஜோதி ஃபிலிம் தயாரிப்பில், மரகத நாணயம் படத்தின் ஏஆர்கே சரவணன் இயக்கும் ‘வீரன்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன் ஆதிரா ராஜ், வினய் ராய், முனீஸ் காந்த், சசி செல்வராஜ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான இந்த படத்தின் டிரைலர், முதல் மற்றும் இரண்டாம் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் மூன்றாவது பாடல் மே 29ஆம் தேதி வெளியாக என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.