spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇதற்காக நான் பெருமைப்படுகிறேன்..... நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு வைரல்!

இதற்காக நான் பெருமைப்படுகிறேன்….. நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு வைரல்!

-

- Advertisement -

நடிகை திரிஷா திரைத்துறையில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.இதற்காக நான் பெருமைப்படுகிறேன்..... நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு வைரல்!

திரிஷா ஆரம்பத்தில் ஜோடி போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சாமி, கில்லி, ஆறு, அபியும் நானும் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென தனியொரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதன் பிறகு திரிஷா நடிப்பில் வெளியான சில படங்கள் வெற்றியடையவில்லை. இருப்பினும் நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்று மீண்டும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர், தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

we-r-hiring

இந்நிலையில் நடிகை திரிஷா நடிகை திரிஷா திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “22 வருடங்களாக சினிமா இன்று மாயாஜாலத்தில் அங்கம் வகித்ததற்காக பெருமைப்படுகிறேன். அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ