நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தது இவர் கன்னடத்தில் அறிமுகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘கனிமா’ பாடலில் நடிகை பூஜா ஹெக்டேவின் நடனம் பெரிய அளவில் பேசப்படுகிறது. இது தவிர ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, ரஜினியின் கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார். அதேசமயம் பீஸ்ட் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜயுடன் இணைந்து ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. இப்படம் 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது.
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “ஜனநாயகன் படம் விஜய் சாரின் கடைசி படம் என நினைக்கிறேன். அதை தான் அவரும் சொல்கிறார். எனவே நானும் அந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க ஆசைப்பட்டேன். இந்த ஜோடியை மக்கள் மறுபடியும் பார்க்க ஆசைப்பட்டார்கள். இருப்பினும் இந்த படம் அவருடைய கடைசி படம் என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -