spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரூ.1000 கோடி வசூலிக்கும் படங்களை என்னால் எடுக்க முடியாது.... மணிரத்னம் பேட்டி!

ரூ.1000 கோடி வசூலிக்கும் படங்களை என்னால் எடுக்க முடியாது…. மணிரத்னம் பேட்டி!

-

- Advertisement -

இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் இயக்குனர் மணிரத்னம்.ரூ.1000 கோடி வசூலிக்கும் படங்களை என்னால் எடுக்க முடியாது.... மணிரத்னம் பேட்டி! இவர் சாதாரணமான கதையையும், அசாதாரணமான கதாபாத்திரங்களையும் திரையில் நேர்த்தியாக கையாண்டு திரை விருந்து படைப்பதில் தனித்துவம் வாய்ந்தவர். அந்த வகையில் மௌன ராகம் தொடங்கி பொன்னியின் செல்வன் வரை இவருடைய படங்கள் அனைத்தும் தனித்துவம் மிக்கதாக அமைந்திருக்கும். இந்நிலையில் இவர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா ஆகியோரின் நடிப்பில் தக் லைஃப் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.ரூ.1000 கோடி வசூலிக்கும் படங்களை என்னால் எடுக்க முடியாது.... மணிரத்னம் பேட்டி! மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ள இந்த படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. அதே சமயம் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. மேலும் இன்று (மே 24) சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய மணிரத்னத்திடம், ஏன் கோலிவுட்டில் ஆயிரம் கோடி வசூல் படங்களை கொடுக்க முடியவில்லை? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மணிரத்னம், “நாம் எதற்காக சினிமாவிற்கு வந்தோம். அதிக வசூல் செய்யும் படங்களை எடுக்க வேண்டும் என்று வந்தோமா? அல்லது நல்ல படங்களை கொடுக்க வந்தோமா? முன்பு ஒரு படம் வெளியாகும் போது பார்வையாளர்கள் அதன் தரத்தை மட்டுமே பார்ப்பார்கள். இப்போது எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது. இனி அது சினிமாவின் தரத்தை கெடுக்காது என்று நம்புகிறேன். என்னால் ஆயிரம் கோடிக்காக படம் எடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ