spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'துணை கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை'...... நடிகர் விஷ்ணு விஷால் பேச்சு!

‘துணை கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை’…… நடிகர் விஷ்ணு விஷால் பேச்சு!

-

- Advertisement -

'துணை கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை'...... நடிகர் விஷ்ணு விஷால் பேச்சு!நடிகர் விஷ்ணு விஷால், சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இவரின் முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷால் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மோகன்தாஸ் ஆர்யன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இன்னும் சில படங்களில் கமிட் ஆகி வருகிறார். அது மட்டும் இல்லாமல் விஷ்ணு விஷால் ஒரு தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

தற்போது விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கிய இந்த படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி நாளை வெளியாக இருக்கிறது.'துணை கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை'...... நடிகர் விஷ்ணு விஷால் பேச்சு! இந்நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த விஷ்ணு விஷால், “துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு விருப்பமில்லை. நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன். அதேசமயம் சின்ன படங்களை தயாரிப்பதிலும் விருப்பமில்லை. லால் சலாம் படத்தில் நான் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. என்னுடைய படங்கள் கிட்டத்தட்ட 72 சதவீதம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இந்த சதவீதத்தை அதிகரிக்க நினைக்கிறேன் இதனால் நான் திமிர் பிடித்தவன் என்று அர்த்தம் இல்லை. என்னை நம்பும் தயாரிப்பாளர்களையும் விநியோகஸ்தர்களையும் மகிழ்விக்கும்படி இருக்க நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார்.

MUST READ