நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கலக்கி வருகிறார். மேலும் இவர் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் பகத் பாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படமானது வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சல் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதேசமயம் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புஷ்பா 2 படத்திற்காக நடிகை ராஷ்மிகா கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராஷ்மிகா மந்தனா, “என்னுடைய சம்பளம் பற்றி வெளியாகும் தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி” என்று கூறினார். மேலும் புஷ்பா 1 படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்தது போல் புஷ்பா 2 படத்திற்காக உங்களுக்கு தேசிய விருது கிடைக்குமா? என்ற என்ற கேள்விக்கு “கிடைக்கும் என நம்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார் ராஷ்மிகா.
- Advertisement -