இட்லி கடை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் ‘இட்லி கடை’. இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி, நடித்திருந்தார். இதில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரக்கனி, பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதன் இசையமைப்பாளராக பணியாற்றி இருந்தார். 
கிரண் கௌஷிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படமானது கிராமத்து பின்னணியில் ‘இட்லி கடை’ ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. வழக்கம்போல் நடிகர் தனுஷ் தனது நடிப்பினால் படத்தை தனது தோளில் தாங்கிப் பிடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களும் அருமையாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. ஜி.வி. பிரகாஷ் இசை படத்திற்கு பலம் தந்துள்ளது. தனுஷின் ‘ராயன்’ படத்தைப் போல் இல்லாமல் நல்ல ஒரு பீல் குட் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது.
Oru chinna idli kadai, oraayiram memories ♨️🥰 pic.twitter.com/Otdh7ydb3d
— Netflix India South (@Netflix_INSouth) October 24, 2025

இந்நிலையில் இந்த படம் வருகின்ற அக்டோபர் 29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.


