Homeசெய்திகள்சினிமாஅவங்க ஒரு வார்த்தை சொன்னா நடிப்பதையே நிறுத்திடுவேன்.... மணிரத்னம் பட நடிகை பேட்டி!

அவங்க ஒரு வார்த்தை சொன்னா நடிப்பதையே நிறுத்திடுவேன்…. மணிரத்னம் பட நடிகை பேட்டி!

-

- Advertisement -

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. அவங்க ஒரு வார்த்தை சொன்னா நடிப்பதையே நிறுத்திடுவேன்.... மணிரத்னம் பட நடிகை பேட்டி!அதைத்தொடர்ந்த இவர் மிஸ்டர் ரோமியோ, பாஞ்சாலங்குறிச்சி, ஜென்டில்மேன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதே சமயம் கடந்த 1999 இல் மதுபாலாவிற்கு, ஆனந்த் ஷா என்பவருடன் திருமணம் நடந்தது.அவங்க ஒரு வார்த்தை சொன்னா நடிப்பதையே நிறுத்திடுவேன்.... மணிரத்னம் பட நடிகை பேட்டி! இவர்கள் இருவருக்கும் அமேயா, கீயா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் வாயை மூடி பேசவும், தேஜாவு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது கண்ணப்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுபாலா. இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தன் மகள்கள் ஒரு வார்த்தை சொன்னால் நடிப்பதையே நிறுத்தி விடுவேன் என கூறியுள்ளார். அவங்க ஒரு வார்த்தை சொன்னா நடிப்பதையே நிறுத்திடுவேன்.... மணிரத்னம் பட நடிகை பேட்டி!அதன்படி அவர், “என்னுடைய குழந்தைகள் தான் என் உலகம், சந்தோஷம், வலிமை எல்லாம். என்னுடைய கேரியர் மற்றும் கனவு எல்லாம் அவங்களுடைய சந்தோஷத்துக்கு பிறகு தான். அம்மா நீங்க நடிக்கப் போகாதீங்க. வேலை செய்யாதிங்க. எங்க கூட இருங்க என்று அவர்கள் ஒரு வார்த்தை சொன்னால் போதும் கொஞ்சம் கூட யோசிக்காமல் எந்த வேலையாக இருந்தாலும் அதை அப்படியே நிறுத்தி விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ