Homeசெய்திகள்சினிமாவிரைவில் தொடங்கும் இளையராஜாவின் பயோபிக் படத்தின் படப்பிடிப்பு!

விரைவில் தொடங்கும் இளையராஜாவின் பயோபிக் படத்தின் படப்பிடிப்பு!

-

- Advertisement -

இளையராஜாவின் பயோபிக் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவர் தனது தனித்துவமான இசையின் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். விரைவில் தொடங்கும் இளையராஜாவின் பயோபிக் படத்தின் படப்பிடிப்பு!இந்நிலையில்தான் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கிறது என தகவல் வெளியானது. அதன்படி இளையராஜாவின் பயோபிக் படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கப் போகிறார் என்றும் அருண் மாதேஸ்வரன் இதனை இயக்கப் போகிறார் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதேசமயம் இந்த படத்தை கனெக்ட் மீடியா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இதற்கிடையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். மேலும் குபேரா, தேரே இஷ்க் மெய்ன், D55 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் தனுஷ் இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விரைவில் தொடங்கும் இளையராஜாவின் பயோபிக் படத்தின் படப்பிடிப்பு!இருப்பினும் சமீப காலமாக இளையராஜாவின் பயோபிக் படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இளையராஜாவின் பயோபிக் படம் தொடர்பான ப்ரீ ப்ரோடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த படம் கைவிடப்பட்டதாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள் என்றும் சொல்லப்படுகிறது.

MUST READ