இந்திய சினிமாவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் இசையினால் பல ரசிகர்களை கட்டி போட்டவர். இவரது இசை பெரும்பாலானவர்களின் கவலையை போக்கும் மருந்தாக விளங்குகிறது. இத்தகைய
பெருமைகளை கொண்ட இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருப்பதாக சில தினங்களுக்கு முன்பாகவே தகவல் கசிந்திருந்தது. அதன்படி இளையராஜாவின் பயோபிக் படத்தை இயக்குனர் பால்கி இயக்க உள்ளதாக கூறப்பட்டது. அதேசமயம் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், படத்தை தனுஷ் தனது உண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தை இயக்க இருந்த பால்கி ஒரு சில காரணங்களால் இதிலிருந்து விலகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே இளையராஜாவின் பயோபிக் படத்தை இளையராஜாவே தயாரிக்க உள்ளதாகவும் இயக்குனரையும் தானே தேர்ந்தெடுக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. ஆதலால் நடிகர் தனுஷ், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன் ஆகிய இருவரையும் இளையராஜாவிடம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்கப் போவது யார் என்பதை இளையராஜா முடிவு செய்துவிட்டு விரைவில் இது சம்பந்தமான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.