இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்
தி ஸ்மைல் மேன்
சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி ஸ்மைல் மேன். இந்த படம் சரத்குமாரின் 150வது படமாகும். இந்த படத்தினை ஷியாம் பிரவீன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சரத்குமார் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படம் இன்று (டிசம்பர் 27) திரையரங்குகளில் வெளியாகிறது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் போர் தொழில் திரைப்படத்தை போல் சரத்குமாருக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு. மாணிக்கம்
திரு. மாணிக்கம் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். எமோஷனல் கலந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் இன்று (டிசம்பர் 27) திரையரங்குகளில் வெளியாகிறது.
அலங்கு
எஸ்.பி. சக்திவேல் இயக்கியுள்ள திரைப்படம் தான் அலங்கு. இந்த படத்தில் குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் இன்று (டிசம்பர் 27) திரையரங்குகளில் வெளியாகிறது.
ராஜா கிளி
சமுத்திரக்கனி, தம்பி ராமையா ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் ராஜா கிளி. இந்த படத்தினை தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார். நடிகர் தம்பி ராமையா இந்த படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் இன்று (டிசம்பர் 27) திரையரங்குகளில் வெளியாகிறது.