Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 3' தியேட்டரில் தான் வெளியாகும்.... இயக்குனர் சங்கர் பேட்டி!

‘இந்தியன் 3’ தியேட்டரில் தான் வெளியாகும்…. இயக்குனர் சங்கர் பேட்டி!

-

- Advertisement -

இந்தியன் 3 திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று இயக்குனர் சங்கர் பேட்டி அளித்துள்ளார்.'இந்தியன் 3' தியேட்டரில் தான் வெளியாகும்.... இயக்குனர் சங்கர் பேட்டி!தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் சங்கர். இவரது இயக்கத்தில் தற்போது கேம் சேஞ்சர் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்திருந்த இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்தியன் 2 படத்தின் கிளைமாக்ஸில் இந்தியன் 3 படத்தின் டிரைலர் இடம்பெற்று இருந்த நிலையில் இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே சமயம் இந்தியன் 3 திரைப்படமானது நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக போகிறது என சமீப காலமாக தொடர்ந்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய சங்கர், இந்தியன் 3 திரைப்படம் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும் என்றும் ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்படுவது வதந்தி என்றும் தெரிவித்துள்ளார்.'இந்தியன் 3' தியேட்டரில் தான் வெளியாகும்.... இயக்குனர் சங்கர் பேட்டி!

எனவே இதன் மூலம் இந்தியன் 3 திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இந்தியன் 3 திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியன் 3 திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ