இந்தியன் 3 திரைப்படத்தை மீண்டும் படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 1996 இல் சங்கர் இயக்கத்திலும் கமல்ஹாசன் நடிப்பிலும் வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே இதன் பிரம்மாண்ட வெற்றி இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கடந்த ஜூலை மாதம் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் சரிவை சந்தித்தது. இருப்பினும் இந்தியன் 2 படத்தில் இறுதியில் இந்தியன் 3 படத்தின் ட்ரெய்லர் இடம் பெற்றிருந்த நிலையில் அந்த ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்தது. எனவே இந்தியன் 3 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது. இருப்பினும் இந்தியன் 2 படத்தின் தோல்வியின் காரணமாக இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியன் 3 நெட்பிளிக்ஸில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் இந்தியன் திரைப்படத்தை மீண்டும் படமாக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தியன் 2 எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் இந்தியன் 3 படத்தில் முழு கவனம் செலுத்தி மீண்டும் சில காட்சிகளை படமாக்க இருக்கிறார்களாம். நாளை (அக்டோபர் 7) கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு இது தொடர்பான போஸ்டர் வெளியாகும் என நம்பப்படுகிறது.