எம் சி சி பள்ளியில் சர்வதேச அளவிலான ICC பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும் என்று எங்கள் விருப்பத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் கோரிக்கையாக வைக்கிறோம் – 1974 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்.


பள்ளி சென்று படித்தாலே தீட்டு என்று சொன்ன காலத்தில் கல்வியை வளர்க்க பள்ளிக்கூடங்களை அமைத்து கிறிஸ்தவ அமைப்புகள் உதவின. தாத்தா, அப்பா செய்த குலத் தொழிலை செய்ய வேண்டும் என்று விஷ்வகர்மா திட்டம் என்ற பெயரில் டெல்லியில் ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டு உள்ளது. எம் சி சி பள்ளியில் படிகத்து முடித்து நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் ஏழை, எளிய மாணவர்களின் படிப்புக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
எம் சி சி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேச்சு. சென்னை சேத்துப்பட்டு எம் சிசி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 1974 ஆம் ஆண்டு எம் சி சி பள்ளியில் படித்து முடித்த மாணவர்களுக்கு இது 50 ஆண்டு. அந்த ஆண்டில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களும், மற்ற ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த முன்னாள் மாணவர்களும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் எம் சி சி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபதாஸ் தினகரன், பள்ளியின் தாளாளர் மனோகர், முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெபர்சன் கிறிஸ்டோபர், 1974 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் ஶ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் தரப்பிலிருந்து பள்ளியில் உள்ள மில்லர் ஹாலில் 8 லட்ச ரூபாய்க்கு குளிர்சாதன வசதி செய்து கொடுத்துள்ளார்கள்.10 லட்ச ரூபாய் வளர்ச்சி நிதி கொடுக்கிறார்கள். லிட்டில் ட்ராப்ஸ் என்ற பெயரில் நடத்தப்படும் முதியோர் இல்லத்திற்கு 6 லட்சத்திற்கு மேல் வழங்குகிறார்கள். பார்வையற்றோர்களுக்கான கருவிகள் வழங்கப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுகளில் சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய 1974 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் ஶ்ரீதர் வாண்டையார், தமிழகத்தின், இளைஞர்களின், தமிழக விளையாட்டு வீரர்களின் எதிர்காலமாக நீங்கள் இங்கு வந்ததற்கு நன்றி. மூன்று தலைமுறை நட்பிற்கு எடுத்துக்காட்டு என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நட்பு குறித்து பேசினார்.
இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் சர்வதேச அளவில் தலைநிமிர்ந்து சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு முதலமைச்சரையே உருவாக்கக் கூடிய பள்ளி நிர்வாகம் நமது நிர்வாகம். இப்போது எங்கு பார்த்தாலும் ICC syllabus இல் படிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். நம் பள்ளியிலும் சர்வதேச பாடத்திட்டத்தை தொடங்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் அதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறோம். தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் என்னை அளித்ததற்கு நன்றி. இந்த நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று நேரம் கேட்டபோது டிசம்பர் மாதம் வைத்துள்ளீர்கள் சென்னையிலிருந்து வருகிறேன் என்று தெரிவித்து இருந்தேன், இயற்கை இன்று உங்களுக்கு உதவி உள்ளது. பொதுவாக குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு தான் பெற்றவர்கள் செல்வார்கள். என் தந்தை படித்த பள்ளிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளீர்கள் நான் தவறாக சொல்லவில்லை. என் தந்தை படித்த பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக முதலமைச்சரை உருவாக்கிய சிறப்பான பள்ளி இது.
என் தந்தை மட்டுமல்ல என் பெரியப்பாக்கள், திமுக கழக உறவுகள், காங்கிரஸ் உறவுகளும் இங்கு உள்ளார்கள் தலைமை செயலகத்தில் உள்ளது போல் உள்ளது. நம்ம பள்ளி நம்ம பவுண்டேஷன் என்ற திட்டத்தை இங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு தான் தமிழக முதலமைச்சர் தொடங்கினார்.
பள்ளியில் படித்தாலே தீட்டு என்று இருந்த நிலையில் படிக்காமல் விட்டால்தான் தீட்டு என்று கல்வியை கொடுக்க கிறிஸ்துவ அமைப்புகள் பள்ளிகளை திறந்து உதவின. கல்வி ஒன்றே அழியாத செல்வம் யாராலும் திருட முடியாத சொத்து என்று தமிழக முதலமைச்சர் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். குலத் தொழிலை செய்ய வேண்டும் என கூறிக் கொண்டு ஒரு குரூப் டெல்லியில் சுற்றி கொண்டுள்ளது. தமிழகத்தில் ஒரு மாணவருக்கு கூட கல்வி சேரவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என முதல்வர் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
விஸ்வகர்மா என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள் , தாத்தா அப்பா என்ன வேலை செய்தார்களோ அதே வேலையை செய்வதுதான் விஸ்வகர்மா திட்டம். நம் மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றும் திட்டமாக உள்ளது மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டம், தமிழக முதலமைச்சர் விஸ்வகர்மா திட்டம் தமிழகத்தில் நிச்சயம் செயல்படுத்தப்படாது என்று தெளிவாக தெரிவித்துள்ளார். நீங்கள் கற்ற கல்வி அடுத்த தலைமுறையினருக்கு பயன்படும் வகையில் செயல்படுங்கள்.
ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்க பயன்பெறும் வகையில் செயல்படுங்கள் என்று உரிமையோடும், அன்போடும் கேட்டுக்கொள்கிறேன். ஶ்ரீதர் வாண்டையார் தான் உண்டு மகிழ்ந்த மில்லர் ஹாலில் குளிர்சாதன வசதி செய்து கொடுத்திருக்கிறார் அவர் படித்த வகுப்பறையிலும் குளிர்சாதன வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் அந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்க வேண்டும் என்று கூறினார்.
“ஆதவ் அர்ஜுனா கட்சியில்தான் உள்ளார்” – விசிக தலைவர் திருமாவளவன் தகவல்
