Homeசெய்திகள்சினிமாமீள முடியாத மிக்ஜம் தாக்கம்!.. உணர்ச்சி பொங்க ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் பார்த்திபன்!

மீள முடியாத மிக்ஜம் தாக்கம்!.. உணர்ச்சி பொங்க ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் பார்த்திபன்!

-

- Advertisement -

மீள முடியாத மிக்ஜம் தாக்கம்!.. உணர்ச்சி பொங்க ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் பார்த்திபன்!நடிகர் பார்த்திபன் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் புதுமைகளை முயற்சித்துப் பார்ப்பவர். பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும், எழுதும் ஒவ்வொரு வரியிலும் புதுமைகளை கையாள்பவர். இயற்கை சீற்றங்களின் போது அவ்வப்போது தன்னால் இயன்ற உதவிகளையும் மக்களுக்கு செய்து வருகிறார். இந்நிலையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உணவு பொட்டலங்களை கொடுத்து உதவினார். அவர் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை கண்டு மனம் வருந்தினார்.மீள முடியாத மிக்ஜம் தாக்கம்!.. உணர்ச்சி பொங்க ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் பார்த்திபன்! “விண்வெளி ஆராய்ச்சிக்காக பல ஆயிரம் கோடிகளை நம் நாடு கொட்டி கொடுக்கிறது. ஆனாலும் அடிமட்ட மக்களின் வாழ்க்கையை மேலே ஏற்ற எந்த ஒரு வழியும் இல்லை, இன்னும் 50 ஆண்டுகள் கழித்து நாம் தொழில்நுட்பத்தில் வெகுவாக முன்னேறி இருக்கலாம். ஆனாலும் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகள் சரி செய்யப்பட்டிருக்குமா…? ” என்று மக்களின் நிலை குறித்து வருந்தி தன்னுடைய மனக்குமுறலை தனது எக்ஸ் தளத்தில் நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

அவர் இப்பதிவு தன்னுடைய தனிப்பட்ட பதிவு எனவும் அரசியல்வாதிகள் யாரையும் குறை கூறவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். சென்னையின் பல இடங்களில் வெள்ளம் இன்னும் முழுமையாக வழியாத நிலையில் பல திரைப்பட பிரபலங்களும்
தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி வருகின்றனர். இரண்டு நாட்களாக வெயில் அடிக்கின்ற காரணத்தினால் ஆங்காங்கே மழை நீர் வடிந்து கொஞ்சம் கொஞ்சமாக தலைநகர் தன் இயல்பு நிலைக்கு திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ