Homeசெய்திகள்சினிமாமறுபடியும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா நடிகை அஞ்சலி?

மறுபடியும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா நடிகை அஞ்சலி?

-

- Advertisement -

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.மறுபடியும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா நடிகை அஞ்சலி? அதே சமயம் இவர் விஜய் சேதுபதி, சூர்யா, ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் ஈகை, கேம் சேஞ்சர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில் கடைசியாக அஞ்சலியின் நடிப்பில் கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி, கேங்க்ஸ் ஆப் கோதாவரி போன்ற படங்கள் வெளியாகின. குறிப்பாக கேங்க்ஸ் ஆப் கோதாவரி படத்தில் அஞ்சலி,  விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மறுபடியும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா நடிகை அஞ்சலி?அஞ்சலி நடித்திருந்த அந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் அஞ்சலி, பஹிஷ்கரனா எனும் வெப் தொடர் ஒன்றிலும் அதே மாதிரியான விலைமாது கதாபாத்திரத்தில்  நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வெப் தொடரில் அஞ்சலியுடன் இணைந்து ரவீந்திர விஜய், அனன்யா, நாகல்லா, ஸ்ரீ தேஜ், பேபி சித்ரா, முகமது பாஷா போன்றோர் நடிக்கின்றனர். மறுபடியும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா நடிகை அஞ்சலி?இதனை முகேஷ் பிரஜாபதி இயக்குகிறார். இந்த வெப் தொடரின் மோஷன் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. மேலும் இந்த வெப் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ