spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK25' பட இயக்குனர் இவரா?..... வெளியான புதிய தகவல்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK25’ பட இயக்குனர் இவரா?….. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK25' பட இயக்குனர் இவரா?..... வெளியான புதிய தகவல்!நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் சிவகார்த்திகேயன் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் நிலையில் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.சிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK25' பட இயக்குனர் இவரா?..... வெளியான புதிய தகவல்!

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன், பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடிக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்பு
ஏற்கனவே வெளியானது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் 24 வது படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. சிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK25' பட இயக்குனர் இவரா?..... வெளியான புதிய தகவல்!இந்நிலையில் புதிய அப்டேட் என்னவென்றால் சிவகார்த்திகேயனின் 25 வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளாராம். இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய் நடிப்பில் The Greatest Of All Time எனும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ