spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதுருவ் விக்ரமின் அடுத்த பட இசையமைப்பாளர் இவரா?.... அப்போ சூப்பர் ஹிட் கன்ஃபார்ம்!

துருவ் விக்ரமின் அடுத்த பட இசையமைப்பாளர் இவரா?…. அப்போ சூப்பர் ஹிட் கன்ஃபார்ம்!

-

- Advertisement -

துருவ் விக்ரமின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.துருவ் விக்ரமின் அடுத்த பட இசையமைப்பாளர் இவரா?.... அப்போ சூப்பர் ஹிட் கன்ஃபார்ம்!

தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துருவ் விக்ரம். அதைத்தொடர்ந்து இவர் விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி இவருடைய நடிப்பில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்துள்ளது. அதாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. துருவ் விக்ரமின் அடுத்த பட இசையமைப்பாளர் இவரா?.... அப்போ சூப்பர் ஹிட் கன்ஃபார்ம்!இந்த படத்தில் துருவ் விக்ரம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியபடுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து துருவ் விக்ரம், ‘டாடா’ படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சமீப காலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. துருவ் விக்ரமின் அடுத்த பட இசையமைப்பாளர் இவரா?.... அப்போ சூப்பர் ஹிட் கன்ஃபார்ம்!அதன்படி இந்தப் படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கும் நிலையில் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ