கடந்த 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் நடிப்பிலும் சங்கரின் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் தான் இந்தியன். ஊழலுக்கு எதிரான கதைகளத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே அதைத்தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. ஆனால் இந்த படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்தியன் 2 படத்தின் கிளைமாக்ஸ் – இல் இடம்பெற்ற இந்தியன் 3 படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதாவது இந்தியன் 3 படத்தில் சேனாபதியின் தந்தை வீரசேகரனின் காட்சிகள் இடம் பெற்றுள்ளனர். வீரசேகரனாக நடித்திருக்கும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்தியன் 3 படத்தின் டிரைலரை பார்க்கும்போது சுதந்திரத்திற்கு முன்பு நடந்த போர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது.
இவ்வாறு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வந்த இந்தியன் 3 திரைப்படம் இந்தியன் 2 படத்தில் ரிலீஸுக்கு பிறகு ஆறு மாதங்கள் கழித்து திரைக்கு கொண்டு வரப்படும் என்று படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.எனவே சங்கர் தற்போது இயக்கி முடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து இந்தியன் 3 படத்தையும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு, நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் இந்தியன் 3 நேரடியாக ஓடிடியில் வெளியிடப்படும் எனவும் அப்படி இல்லை என்றால் திரையரங்குகளில் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -