spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யப் போகிறாரா சிம்பு?

பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யப் போகிறாரா சிம்பு?

-

- Advertisement -

பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யப் போகிறாரா சிம்பு?நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோவாக நடித்து வருபவர். மிகப்பெரிய இயக்குனரான டி ராஜேந்தரின் வாரிசாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் தன்னுடைய திறமையினால் முன்னணி இடத்தைப் பிடித்தார். சிம்பு என்றாலே சர்ச்சைகள் என்னும் அளவிற்கு ஏகப்பட்ட சர்ச்சை வளையத்துக்குள் சிக்கி சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதில் உடல் எடை அதிகரித்து ஒரு ஹீரோவுக்கான தோற்றமே இல்லை என்பது போன்ற விமர்சனங்களையும் சந்தித்தார். ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி தன் உடலைக் கட்டுக்கோப்பாக்கி மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு சிம்புவின் அடுத்த ரவுண்டுக்கான நல்ல தொடக்கமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களிலும் நடித்தார். அடுத்ததாக கமல் தயாரிப்பில் STR48 படத்திலும் நடிக்கிறார். தற்போது 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இது அவருடைய பெற்றோர்களையும் ரசிகர்களையும் வருத்தமடையச் செய்துள்ளது. பல நடிகைகளுடன் காதலில் இருப்பதாக சிம்புவைப் பற்றிய கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளிவந்தன. இருப்பினும் அவர் யாரை மணக்கப் போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைத்த பாடில்லை. இந்நிலையில் நடிகர் சரத்குமாரின் மகளும் முன்னணி நடிகையுமான வரலட்சுமியை திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் சிம்பு. தந்தை டி.ராஜேந்தருக்கு வயதாகிக் கொண்டே செல்வதால் விரைவில் சிம்புவுக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யப் போகிறாரா சிம்பு? இந்நிலையில்தான் போடா போடி படத்தில் கணவன் மனைவியாக நடித்த சிம்புவும் வரலட்சுமியும் தற்போது நிஜ வாழ்வில் இணையப் போகிறார்கள் என்று செய்திகள் கசிந்துள்ளன. வரலட்சுமி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் வில்லியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர் என்னும் செய்தியும் பரவி வருகிறது. இச்செய்தியின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.இருப்பினும் சிம்புவுக்கு திருமணம் ஆகப்போகிறது என்னும் செய்தியை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

MUST READ