spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதலைவர் 171 இல் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?

தலைவர் 171 இல் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?

-

- Advertisement -

ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ரஜினி நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் திலிப் குமார் இயக்கியிருந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. கலாநிதி மாறன் தயாரிப்பில் அனிருத் இதற்கு இசை அமைத்திருந்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினி தனது 170 ஆவது படத்தில் தற்போது நடித்து வருகிறார். தலைவர் 170 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஜெய் பீம் படம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா ரகுபதி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தலைவர் 171 இல் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?

we-r-hiring

அடுத்ததாக ரஜினி, கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஒப்பந்தத்தில் சிவகார்த்திகேயன் கையெழுத்திட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. தலைவர் 171 இல் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 இல் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸாக இருக்கும் என்று சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். எனவே சிவகார்த்திகேயன் , தலைவர் 171 இல் நடிக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், அயலான், SK21 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ