காந்தாரா 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
அதுல பாதாளத்தில் இருந்த கன்னட சினிமாவை தூக்கி நிறுத்திய படம் என்றால் அது காந்தாரா படம் தான். ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. சாதாரண தெய்வ நம்பிக்கை கதையம்சம் கொண்ட காந்தாரா படம் பின்னணி இசையாலும் , தொழில்நுட்ப காரணங்களாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை ரிஷப் ஷெட்டி உருவாக்க இருக்கிறார். அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளையும் ரிஷப் ஷெட்டி முடித்துவிட்டார். இந்த காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமானது காந்தாரம் முதல் பாகத்தில் ப்ரீக்குவலாக உருவாக உள்ளது. அதாவது கிபி 301- 400 காலகட்டங்களில் நடப்பது போன்று உருவாக்கப்பட உள்ளது.
இது சம்பந்தமான பல தகவல்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தற்போது காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ஒரு கையில் திரிசூலமும் மறு கையில் கோடரியும் ஏந்தி மிரட்டலான லுக்கில் ரிஷப் செட்டி காணப்படுகிறார். போஸ்டரிலேயே கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் படம் ரிலீஸ் ஆகும் என்பதையும் அறிவித்துள்ளனர். ஹாலிவுட் லெவலில் இந்த பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. பழங்கால வீரன் ஒரு பெரிய போரில் பலரை கொன்று குவிப்பதை போன்று இந்த காட்சி அமைந்துள்ளது. காந்தாரா முதல் பாகத்தின் ப்ரிக்குவல் என்பதால் காந்தாரா ஏ லெஜெண்ட் சாப்டர் 1 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இது படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சியின் ஒரு பகுதியாக இருக்கும் போல தெரிகிறது.
Step into the land of the divine 🔥
Presenting #KantaraChapter1 First Look & #Kantara1Teaser in 7 languages❤️🔥
▶️ https://t.co/GFZnkCg4BZ#Kantara1FirstLook #Kantara @shetty_rishab @VKiragandur @hombalefilms @HombaleGroup @AJANEESHB @Banglan16034849 @KantaraFilm pic.twitter.com/2GmVyrdLFK
— Hombale Films (@hombalefilms) November 27, 2023
தெய்வீக உணர்வை ஆணித்தனமாக கூறிய காந்தாரா 1 படத்தையே மிஞ்சும் வகையில் இந்த போஸ்டர் மிக பிரம்மாண்டமாகவும் மாஸாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திலும் தெய்வீகம் மற்றும் ஆக்சன் காட்சிகளும் நிறைந்திருக்கும் என்பதை போஸ்டர் தெளிவுபடுத்துகிறது. கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட கடம்ப மன்னனின் கதையையும் இணைத்து இக்கதை உருவாகியுள்ளது என்பதையும் டீசரில் அறிவித்து விட்டனர். காந்தாரா முதல் பாகத்தில் கிளைமாக்ஸ் காட்சியை இணைக்கும் விதமாக இதன் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியுள்ளது.
முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.