சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரபல திரைப்பட நடிகர் ஜெயராமன் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தாா்.
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெயராம். இவர் இன்று உலகப்பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தனது மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு, தீட்சிதர்கள் அவருக்கு ஆசீா்வாதம் செய்து வைத்து, பிரசாதம் வழங்கினர். பின்னர் தனியார் ஓட்டலுக்கு சென்ற போது செய்தியாளா்களிடம் அளித்த பேட்டியில், “எனது தாயாரின் ஊர் கும்பகோணம். அப்பா பாலக்காடு. சிறிய வயதில் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கும்பகோணம்தான். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்தேன். பின்னர் வர வாய்ப்பு இல்லை.
கடவுள் புண்ணியத்தில் இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வர முடிந்தது. சின்ன வயதில் கும்பகோணத்தில் நிறைய நேரம் செலவழித்தேன். கும்பேஸ்வரன் கோயில் வாசல், சாரங்கபாணி கோயில் வாசலில்தான். எனது திருமணம் முடிந்த பின்பு அந்த கோயில்களை சுற்றி காண்பிக்க முடியவில்லை. தற்போது கும்பகோணம் கோயிலுக்கு செல்ல உள்ளோம்.
மேலும், தற்போது தமிழில் தனுஷ் உடன் படப்பிடிப்பில் உள்ளேன். ஊர்வசியுடன் சோ்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படத்தில் நடக்கிறேன். தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறேன். கன்னடத்தில் சிவராஜ் சாருடன் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதுபோல் மலையாளத்தில் ஆசைகள் ஆயிரம் படத்தில் நடித்து வருகிறேன். எல்லா படங்களும் நன்றாக செல்கிறது என்று கூறினார்.

அப்போது செய்தியாளர்கள் கேரளா ஐயப்பன் கோயில் துவார பாலகர் சிலை சம்பந்தமாக கேள்வி எழுப்பியபோது, ஐயோ சாமி, என சிரித்துக் கொண்டே கையெடுத்து கும்பிட்டபடி சென்று விட்டார்.
SIR சட்ட பூர்வமானது அல்ல…அரசியல் சாசனத்துக்கு எதிரானது – வழக்கறிஞர் கபில் சிபல்


