படப்பிடிப்பில் பிரபல சீரியல் நடிகருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரை நடிகர்களில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் ஸ்ரீகுமார் கணேஷ். அந்த வகையில் இவர் ஆனந்தம், உறவுகள், யாரடி நீ மோகினி, வானத்தைப்போல போன்ற பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வெள்ளித்திரையிலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில், ஹீரோவின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் ஸ்ரீகுமார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டபோது ஸ்ரீகுமார் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு கண்ணாடி முன்பு எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று அந்த கண்ணாடியை உடைப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த முகம் பார்க்கும் கண்ணாடியை அவர் உடைக்கும் பொழுது அவருடைய கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வரத் தொடங்கியிருக்கிறது.
அவர் தன்னுடைய கையில் வடியும் ரத்தத்தை பஞ்சினால் துடைத்துக்கொண்டே காட்சி நன்றாக வந்திருக்கிறதா? என்று இயக்குனரிடம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட பலரும் ஸ்ரீகுமார் கணேஷ் சினிமாவில் இந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறாரே என்று பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
- Advertisement -


