Homeசெய்திகள்சினிமாகேரள நடிகைகளின் பாலியல் துன்புறுத்தல்களை மையமாக வைத்து உருவாகிறதா 'தி கேரளா ஸ்டோரி 2'?

கேரள நடிகைகளின் பாலியல் துன்புறுத்தல்களை மையமாக வைத்து உருவாகிறதா ‘தி கேரளா ஸ்டோரி 2’?

-

- Advertisement -

கடந்த ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி, யோகிதா பிஹானி, சோனியா பவானி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கேரள நடிகைகளின் பாலியல் துன்புறுத்தல்களை மையமாக வைத்து உருவாகிறதா 'தி கேரளா ஸ்டோரி 2'?

கேரளாவில் காணாமல் போன 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு அடிமைகளாக அனுப்பப்படுகின்றனர். அங்கு தீவிரவாதிகளின் பாலியல் அடிமைகளாக இந்தப் பெண்கள் பயன்படுத்தப்படுவதாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்ற பல மாநிலங்களில் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக இந்த படத்தை வெளியிடக் கூடாது என பல தடைகளும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படமானது மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் உருவாகப் போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.கேரள நடிகைகளின் பாலியல் துன்புறுத்தல்களை மையமாக வைத்து உருவாகிறதா 'தி கேரளா ஸ்டோரி 2'? எனவே இது தொடர்பாக இயக்குனர் சுபித்தோ சென் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது, “நீ கேரளா ஸ்டோரி 2 படம் உருவாகிறது என்பது உண்மைதான். தற்போது இந்த படம் தொடர்பான ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்திற்கும் ஹேமா கமிட்டி அறிக்கைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. இது பொய்யான தகவல். அந்த தகவலில் உண்மை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ