தமிழ் சினிமாவில் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்திருந்த ‘லவ் டுடே’ திரைப்படம் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே ரூ.100 கோடியை தட்டி தூக்கினார் பிரதீப். அடுத்தது தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் இவர், டிராகன் என்ற வெற்றி படத்தையும் கொடுத்து தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். எனவே இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள எல்ஐகே எனும் திரைப்படத்தையும், கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள டியூட் என்ற படத்தையும் கைவசம் வைத்திருக்கிறார்.
இந்த இரண்டு படங்களுமே 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒரே நாளில் பிரதீப் ரங்கநாதனின் இரண்டு படங்கள் வந்தாலுமே அதை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். ஆனால் தற்போது இருதரப்பு தயாரிப்பு நிறுவனமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாகவும், பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் ஒரே ஒரு படம் தான் திரைக்கு வரும் எனவும் சொல்லப்படுகிறது.
அதன்படி ‘எல்ஐகே’ திரைப்படம் தள்ளிப்போகும் எனவும் ‘டியூட்’ படம் மட்டும் தீபாவளிக்கு வரும் எனவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படக்குழு இது தொடர்பாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -