விஜய் ஆண்டனி நடிக்கும் சக்தித் திருமகன் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் நடிப்பிலும் ஆர்வமுடைய இவர், தற்போது பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அருவி, வாழ் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் 25வது படமான இந்த படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து திருப்தி ரவீந்திரா, கிரண், வாகை சந்திரசேகர், சுனில் கிருபாலனி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியே இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஷெல்லி காலிஸ்ட் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.
11 sunrises🌞 left until #ShakthiThirumagan‘s uprising🔥#VA25 #ShakthiThirumaganFromSept19#ShakthiThirumaganTrailer from Today💥#Bhadrakaali #VijayAntony25@vijayantony @ArunPrabu_ @TruptiRavi58094 #SunilKirpalani @vijayantonyfilm @ProRekha @vattalstudios pic.twitter.com/G9nxQ4xzvQ
— VijayAntonyFilmCorporation (@vijayantonyfilm) September 8, 2025
இந்த படமானது அரசியல் கலந்த கதைக்களத்தில் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படமானது வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று (செப்டம்பர் 8) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.