சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் ‘மதராஸி’ திரைப்படம் வெளியானது. ஆக்சன் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர வெங்கட் பிரபு, புஷ்கர்- காயத்ரி ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் 24வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப்போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதாவது இந்த கூட்டணியில் வெளியான ‘டான்’ திரைப்படம் ரூ.100 கோடியை தட்டி தூக்கிய நிலையில், இவர்களது புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
அதன்படி இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் கவனம் செலுத்தியதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய அடுத்த படம் சிபி சக்கரவர்த்தியுடன் தான் என்று உறுதி செய்துள்ளார். எனவே விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புதிய அப்டேட் என்னவென்றால், சிவகார்த்திகேயன் – சிபி சக்கரவர்த்தி கூட்டணியிலான புதிய படம் ‘SK 24’ அல்லது ‘SK 26’ படமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அடுத்தது இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கப் போகிறாராம். கெவின் குமார் இதன் சண்டை பயிற்சியாளராக பணியாற்ற உள்ளாராம். மேலும் ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படத்திற்கு பாஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படம் தரமான சம்பவம் செய்த நிலையில், ‘பாஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் பயங்கரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -


