ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தை கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை கலாநிதி மாறன் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதன்படி படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஹைதராபாத் பகுதியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதைத் தொடர்ந்து தற்போது விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான தகவலின் படி அந்த பாடலில் கன்னட நடிகர் ஒருவர் நடித்துள்ளதாக தகவல் கசிந்திருந்தன. இந்நிலையில் இதன் கூடுதல் தகவலாக கன்னட நடிகர் உபேந்திரா, கூலி படத்தில் இணைந்திருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் இந்த படமானது 2025 கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
- Advertisement -