Homeசெய்திகள்சினிமாலிங்குசாமியின் இந்த பிளாக்பஸ்டர் படத்தை நிராகரித்த விஜய்.... காரணம் இது தானா?

லிங்குசாமியின் இந்த பிளாக்பஸ்டர் படத்தை நிராகரித்த விஜய்…. காரணம் இது தானா?

-

- Advertisement -

லிங்குசாமியின் இந்த பிளாக்பஸ்டர் படத்தை நிராகரித்த விஜய்.... காரணம் இது தானா?தொடக்க காலத்தில் ஆனந்தம்,சண்டக்கோழி, ரன், பீமா,பையா என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் அதற்கு பின்னர் சூர்யாவை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய அஞ்சான் திரைப்படம் படுதோல்விப் படமாக அமைந்தது. அதன் பின்னர் சரியான வாய்ப்புக்காக காத்திருந்த லிங்குசாமி மீண்டும் வேட்டை,சண்டக்கோழி 2, வாரியர் போன்ற படங்களை இயக்கினார். இப்படங்களும் மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்துவிட்டன. லிங்குசாமியின் ஆரம்பகால வெற்றியில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் திரைப்படமாக அமைந்தது விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி. சென்னை சிட்டியில் ஒரு மாபெரும் ரவுடியைக் கல்லூரி மாணவனான விஷால் பொதுமக்கள் மத்தியில் அடித்து துவம்சம் செய்துவிட்டு தன் சொந்த கிராமத்திற்கு சென்று விடுகிறான். அதற்குப் பழி வாங்க விஷாலைத் தேடி கிராமத்திற்குப் படையெடுக்கிறது வில்லன் கேங். கிராமத்திற்கு சென்ற பின்தான் வில்லன் கேங்கிற்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஹீரோவின் தந்தை பல ரவுடிகளும் பயப்படும் பெரிய தலக்கட்டு என்பதை வில்லன் தெரிந்துகொண்டு, பின் பதுங்கி பதுங்கி ஹீரோவை பழிவாங்க துடிக்கிறான். இறுதியில் ஹீரோவுடன் நேருக்கு நேர் மோதி தோற்றுப் போவது போன்று படம் முடிக்கப்பட்டிருந்தது. வில்லனான காசியை யார் என்று தெரியாமல் அவன் மீது கை வைக்கும் விஷால், அவன் தான் காசி என்பதைத் தெரிந்தவுடன் பஸ்ஸிலிருந்து இறங்கிச் சென்று வில்லனை பொளந்து கட்டும் அந்த சீனை இன்றும் தொலைக்காட்சியில் பார்த்தால் புல்லரிக்கும். அப்படி ஒரு ஃபயரான சீன் அது. லிங்குசாமியின் இந்த பிளாக்பஸ்டர் படத்தை நிராகரித்த விஜய்.... காரணம் இது தானா?ஹீரோ விஷாலுக்கு இப்படி ஒரு மாஸ் காட்சி என்றால், விஷாலின் தந்தையாக வரும் ராஜ்கிரனுக்கு வேற லெவல் மாஸ் காட்சிகளை வைத்திருந்தார் லிங்குசாமி. ஊரிலேயே மரியாதை மிக்க பெரிய மனுஷனாக வரும் ராஜ்கிரண் கதாபாத்திரம் விஷால் கதாபாத்திரத்தையே மிஞ்சிவிடும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. இவையெல்லாமே சண்டக்கோழி படத்தை பிளாக்பஸ்டர் படமாக மாற்றி இருந்தது.
இந்நிலையில் சண்டக்கோழி படத்தின் கதையை லிங்குசாமி முதலில் நடிகர் விஜய்க்கு தான் கூறியுள்ளாராம். ஆனால் விஜய் படத்தின் இரண்டாம் பாதி கதையைக் கூட கேட்கவில்லையாம். ஏனெனில் படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தை விட ஹீரோவின் தந்தை கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக இருந்திருக்கிறது. லிங்குசாமியின் இந்த பிளாக்பஸ்டர் படத்தை நிராகரித்த விஜய்.... காரணம் இது தானா?படம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி அடைந்த பின்னர் திடீரென்று ஒரு நாள் லிங்குசாமியை ஒரு விழாவில் சந்தித்த விஜய்,”சண்டக்கோழி திரைப்படம் நன்றாக இருந்தது. விஷால் தான் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார்” என்றும் லிங்குசாமியைப் பாராட்டியுள்ளார். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் லிங்குசாமி தெரிவித்துள்ளார். மேலும் அந்த காலகட்டத்தில் விஷால் போன்ற வளர்ந்து வரும் நடிகர் தான் அந்த கதாபாத்திரத்திற்கு கரெக்டாக இருக்கும் என்பதையும் லேட்டாகத்தான் நானும் உணர்ந்து கொண்டேன் என்றும் லிங்குசாமி கூறியுள்ளார்.

MUST READ